• May 18 2024

நடிகர் கமல் ஹாசனின் முழு சொத்து மதிப்பு…ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன்.

திரையுலக நடிகராகவும் இயக்குநராகவும் தனது வேறுபட்ட நடிப்பின் மூலம் கலக்கி வரும் கமல் தற்போது அரசியலிலும் இறங்கி விட்டார்.

இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

எனினும் இதற்குமுன் வருகிற மே 15ஆம் தேதி விக்ரம் திரைப்படம் ட்ரைலர் மற்றும் இசை இரண்டும் வெளியாகவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசனின் முழு சொத்து மதிப்பு பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது.

இவரின் முழு சொத்து மட்டுமே சுமார் ரூ. 177 கோடி என்பதோடு கமல் ஹாசனுக்கு பின் திரையுலகிற்கு வந்த விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்கள் பல நூறு கோடிகளை சொத்து சேர்த்துள்ள நிலையில், கமல் ஹாசன் மட்டும் ரூ. 177 கோடி சொத்து வைத்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement