• Apr 27 2024

நிச்சயதார்த்தத்திற்கு ரெடியான நடிகர் ஹரிஸ் கல்யாண்- காதல் மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சிந்து சமவெளி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் தான் ஹரிஸ் கல்யாண். இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தும் சரியான படவாய்ப்புக் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் திரும்பினார். பின்பு மீண்டும் தமிழில் பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இருப்பினும் இவருக்கு சிறந்ததொரு அடையாளத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் காட் என்ட்ரியாக நுழைந்த இவர் இரண்டாவது வெற்றியாளராகவும் தேர்வாகினார். பிக் பாஸ் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்ததோடு ரசிகர் பட்டாளத்தையும் பெற்று கொடுத்தது.


தொடர்ந்து இவர் நடிப்பில்  பியார் பிரேமா காதல் என்னும் படம் வெளியானது. இந்த படத்தில்  பிக் பாஸில் இடம் பெற்றிருந்த ரைசா வில்சன் நாயகியாக நடிக்க யுவன் சங்கர் ராஜா படத்தை தயாரித்திருந்தார். அடல்ட் லவ் கதைகளை கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓ மண பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் இறுதியாக  ஓ மண பெண்ணே ஓடிடியில் வெளியாகி இருந்தது. தற்போது இவர் நடிப்பில் நூறு கோடி வானவில், நட்சத்திரம், டீசல் உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கிறது.


இதற்கிடையே  சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் தனது காதலியை அறிமுகப்படுத்தினார் ஹாரிஸ்.  ஒரு பெண்ணின் கையை பிடித்தபடியே அவர் முதன்முதலில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். பின்னர் தனது காதலி இவர் தான். விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளேன் என்று பதிவிட்டார்.


இந்நிலையில் நிச்சயதார்த்தம் செய்வதற்கு ரெடியானது போன்ற தோற்றத்துடன் ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது காதலி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளதைக் காணலாம்..


Advertisement

Advertisement

Advertisement