• Jan 22 2025

அடுத்த சம்பவம் தயாராகிறது... தனுஷுடன் நடிகர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட அந்த புகைப்படம்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஜீ.வி பிரகாஷ் இசையில் சமீபத்தில் வெளியாகிய தங்கலான் தற்போது வரையில் நல்ல வசூல் சம்பாதித்து வருகிறது. அதில் ரசிகர்களும் ஜி.வி பிரகாஷ் இசைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஜி. வி. நடிகர் தனுசுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து புது திரைப்படத்திற்கான அப்டேட் கொடுத்துள்ளார்.


"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" (NEEK) என்ற திரைப்படம் நடிகர் தனுஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பவிஷ் , அனிகா சுரேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் . இப்படத்தை தனுஷ், கஸ்தூரி ராஜா ஆகியோர் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். திரைப்படம் 14 அக்டோபர் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையே அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. நடிகர் தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தினை ஷேர் செய்த ஜி.வி. ஷூட்டிங் டைம் வித் மை இயக்குனர் என்று பதிவிட்டுள்ளார்.

 

Advertisement

Advertisement