தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் நாக அர்ஜுனா, மொத்தமாக இரண்டு திருமணங்கள் செய்தார். அவருடைய முதல் திருமணத்தில் பிறந்தவர் தான் நாக சைதன்யா. அவரும் பிரபல நடிகராக வலம் வருகின்றார். அதற்கு பின்பு இரண்டாவதாக நடந்த திருமணத்தில் அகில் என்ற மகன் பிறந்தார்.
நாக அர்ஜுனா முதலில் லட்சுமி என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு பிறந்தவர் தான் நாக சைதன்யா. அவரும் தனது தந்தை. தாத்தா வழியிலேயே நடிகராக காணப்படுகின்றார். எனினும் திடீரென லட்சுமியை விவாகரத்து செய்தார் நாக அர்ஜுனா.
அதன்பின்பு நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு பிறந்தவர் தான் அகில். இவரும் தெலுங்கு சினிமாவில் நடிகராக வலம் வருகின்றார்.
2014 ஆம் ஆண்டு நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின் சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்தார் நாக சைதன்யா.
நாக சைதன்யாவின் சகோதரர் ஆன அகிலுக்கு ஏற்கனவே ஒரு நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் வரை செல்லாமல் தடைப்பட்டுள்ளது.அதன் பின்பு அவர் ஓவியர் ஜெய்னப் ராவத்ஜி என்பவரை காதலித்தார்.
இந்த நிலையில், அகில் - ஜெய்னப்பின் திருமணம் எதிர்வரும் மார்ச் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இவருடைய திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!