• Mar 25 2026

விஜய்யை பிடிக்கும் என்பதற்காக ஓட்டுப்போட முடியாது.. வெளிப்படையாகப் பேசிய அரவிந்தசாமி

shali / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் திறமையான நடிகராகவும், சிந்தனைசார் கருத்துகளை வெளிப்படையாக பகிரும் நபராகவும் அறியப்படுபவர் அரவிந்தசாமி. சமீபத்தில் அவர் தெரிவித்துள்ள ஒரு கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவர் கூறிய கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.


அவரது பேட்டியில், “ஒருவரை நடிகராக விரும்புகிறோம் என்பதற்காக அவருக்கு அரசியலில் ஓட்டு போட முடியாது” என்று தெளிவாக கூறியுள்ளார். சினிமாவில் ஒரு நடிகர் பல கதாபாத்திரங்களில் மக்களை காப்பாற்றுவது, நிஜ வாழ்க்கையிலும் அதேபோல் செயல்படுவார் என்று கருதுவது சரியான அணுகுமுறை அல்ல என அவர் விளக்கியுள்ளார்.

மேலும், "சினிமாவில் பலரைக் காப்பாற்றியதால் நிஜத்திலும் மக்களைக் காப்பாற்றுவார் என எப்படி நம்புவது? ஒரு மாநிலத்தை ஆளவும், மக்களுக்கான திட்டங்களை வகுக்கவும் அவர் தன்னை எப்படித் தயார் செய்துகொண்டுள்ளார்? முதலில் அவருடைய நோக்கம் என்ன என்பது எனக்குத் தெரிய வேண்டும். அந்த நோக்கம் சரியாக இருந்தால் மட்டுமே என்னால் அவருக்கு ஓட்டு போட முடியும்." என அவர் கூறியுள்ளார்.

அரவிந்தசாமியின் இந்த கருத்து, ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகர் அரசியலுக்கு வருவது புதிய விஷயம் அல்ல. ஆனால், அவரின் அரசியல் நோக்கம் மற்றும் திட்டங்கள் பற்றிய தெளிவு மிக முக்கியம் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

Advertisement

Advertisement