• May 19 2024

பைக் ட்ரிப் முடித்து விட்டு சென்னை திரும்பிய நடிகர் அஜித்- வெளியாகிய அன்சீன் புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் அஜித் தான் நடித்து வரும் ஏ.கே 61 படத்தின் படப்பிடிப்பை பாதி முடித்து விட்டு தனது நண்பர்களுடன் இணைந்து பைக் டூர் சென்று விட்டார். இவருடன் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியாரும் கலந்து கொண்டார்.இவர் ஏ.கே 61 படத்தில் நடித்து வருகின்றார்.

 அந்த வகையில் கடந்த மாதம் லடாக்கிற்கு பைக் ட்ரிப் கிளம்பினார்.அங்கிருந்து காஷ்மீர், மணாலி என தொடர்ந்து ஒரு மாதமாக வட இந்தியாவில் பைக் ட்ரிப் மேற்கொண்டு வந்தார் அஜித்.


வழக்கமாக அஜித் பைக் ட்ரிப் சென்றால் ஒன்றிரண்டு புகைப்படங்கள் தான் வெளியாகும், ஆனால் இம்முறை தினந்தோறும் அவரது புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்த வண்ணம் இருந்தன.


இந்நிலையில், தற்போது அஜித்தின் ஒரு மாத பைக் ட்ரிப் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னை வந்துவிட்டார் அஜித். இங்கு சில நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் ஏகே 61 பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளார். இதனிடையே அஜித் பைக் ட்ரிப்பின் போது எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளன.

அதில் ரோட்டோர கடையில் அமர்ந்து அஜித் உணவருந்தும் போதும், டீ குடிக்கும் போதும் எடுத்த புகைப்படங்களும் இடம்பெற்று உள்ளன. அந்த புகைப்படங்களில் அஜித்தின் எளிமையை பார்த்து வியந்துபோன அவரது ரசிகர்கள், அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement