• May 19 2024

இதுவரை காணாத புதிய லுக்கில் இருக்கும் தனுஷ்- கேப்டன் மில்லர் திரைப்படத்தின் லேட்டஸ்ட் கிளிக்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் தான்  ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தை ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருவதோடு  சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகின்றார்.இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஆரம்பமாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியிருந்தன.இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 120 நாட்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் படத்தில் இதுவரை காணாத புதிய லுக்கில் தனுஷ் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. நீண்ட முடி மற்றும் தாடியுடன் தனுஷ் இந்த புகைப்படத்தில் காட்சியளிக்கிறார். 


ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு  'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியானது . இதில் Madras Regiment-ன் ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்ட நிலையில் தனுஷின் பிம்பம் போஸ்டரில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement