• May 05 2024

Biggboss-7 இலிருந்து விலகிய அப்பாஸ்... அதிரடியாக களமிறங்கும் 'வாரிசு' பட நடிகர்...!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 


அந்தவகையில் அக்டோபர் 1-ஆம் தேதி இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. அத்தோடு பிக்பாஸில் இந்த முறை இரண்டு வீடுகள் என்ற தகவல் வெளியான நாளிலிருந்து இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றது.

அத்தோடு போட்டியாளர்கள் குறித்த தகவலும் அடிக்கடி வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றது. மேலும் ஏற்கெனவே வெளியான லிஸ்ட்டில் உள்ளவர்கள் பலர் இப்போது கலந்து கொள்ளவில்லை என்ற தகவலும் இணையத்தில் கசிந்த வண்ணம் தான் இருக்கின்றது.


அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன் பங்கேற்பதாக கூப்பட்ட நிலையில் பின்னர் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் அவருக்குப் பதிலாக சரவண விக்ரம் தான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் எனக்கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது நடிகர் அப்பாஸ் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் இப்போது அவரும் விலகி விட்டார் எனவும், அவருக்குப் பதிலாக விஜய்யின் 'வாரிசு' உள்ளிட்ட  பல படங்களில் நடித்த நடிகர் ஷாம் களமிறங்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இது எந்தளவிற்கு உண்மை என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement