• May 18 2024

''லியோ'' உடன் மோத தயாராகும் "கணபத்"... ஜவான் படத்தினை விட மிரட்டும் டீசர் ரிலீஸ்...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

டைகர் ஷெராப், அமிதாப் பச்சன் மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் உருவாக்கிய "கணபத்" என்ற மிரட்டும் டீசர் இன்று  வெளியாகி இருக்கிறது.


ஷாருக்கான் நடிப்பில் திரைக்கு வந்த ஜவான் திரைப்படம்  ஒட்டு மொத்த சினிமாவையுமே ஆட்டிப்படைத்தது. அட்லி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியான 18 நாட்களில் ஆயிரம் கோடி வசூலை தொட்டுவிட்டது.இந்த சூழலில் ஜவான் படத்தையே மிஞ்சும் அளவுக்கு கணபத் என்ற மிரட்டும் டீசர் வெளியாகி இருக்கிறது. 


இயக்குனர்கள் மிகப்பிரமாண்ட பட்ஜெட்டில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள். அதுவும் கணபத் படத்தின் டீசர் ரசிகர்களை வியக்கும் படியாக அமைந்திருக்கிறது. மக்கள் போருக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும்போது "நம்மை காப்பாற்ற ஒரு தலைவன் வர வரைக்கும் இந்த யுத்தத்தை தொடங்க வேண்டாம்" என்ற ஒரு குரல் கேட்கிறது. அப்போது தான் டைகர் ஷெராப் என்ட்ரி கொடுக்கிறார். 


"எங்க ஆளுங்களுக்கு ஒரு பிரச்சனை நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்" என்ற கர்ஜனை குரலுடன் வருகிறார்.அதன் பிறகு தான் போர் ஆரம்பிக்க இருக்கிறது.


மேலும் இந்த டீசர் இப்போது ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளதால் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இத்திரைப்படம் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய்யின் லியோ படத்திற்கு கணபத் படத்திற்க்கும் இடையில் தான் போர் நடக்க போகிறது. 


Advertisement

Advertisement