• May 18 2024

ஆத்தாடி...ஒரு திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு நடிகை ஹனி ரோஸ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

Jo / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை ஹனி ரோஸ்தமிழில் விக்ராந்த் ஜோடியாக முதல் கனவே என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின் இவர் ஜீவா நடித்த சிங்கம் புலி, சலங்கை துரை நடித்த கந்தர்வன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பின் நடிகை ஹனிரோஸ் மலையாள படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார்.


சிறிய இடைவெளிக்கு பின் இவர் சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்து இருந்தார்.இப்படத்தில் நடிகை சுருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


இந்த நிலையில் ஆந்திர மாநிலம் மார்கப்பூர் என்ற பகுதியில் ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் நடிகை ஹனி ரோஸ் பங்கேற்றிருந்தார். இதற்காக ரூ. 50 முதல் ரூ.60 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதுபோல கேரளா மாநிலத்தில் திறப்பு விழாக்களில் பங்கேற்கும்போது ஆந்திரா போல் அல்லாமல் மிக குறைவாகவே சம்பளமாக பெறுகிறாராம் என தகவல் கூறப்படுகிறது.


மேலும், ஹனி ரோஸின் அழகை காணவே பல ரசிகர் கூட்டம் குவிக்குறது. மேலும், ஹனி ரோஸ் தனது அழகிற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று கூட விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு பதில் அளித்த அவர், நான் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்யவில்லை. சில பவுடர்களை மட்டுமே வைத்து என்னுடைய அழகை பராமரிக்கிறேன்.  நடிகையாக இருந்து கிளாமர் துறையில் பணியாற்றுவது என்பது எளிதான விஷயம் அல்ல என கூறியிருந்தார்.


Advertisement

Advertisement