• May 03 2024

பிரமாண்டமாக நடந்த அமீர் கான் மகளின் நிச்சயதார்த்தம்.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் வந்த கமலின் மகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் அமீர் கான். இவர் கடந்த 1986-ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை காதலித்து பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரா கான் என்ற அழகிய மகள் ஒருவர் உள்ளார். 


அந்தவகையில் அமீர் கானின் மகள் இரா கானுக்கும் அவருடைய காதலருக்கும் நேற்றைய தினம் கோலாகலமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர்கானின் மகள் இரா,  நுபுர் ஷிக்கரே என்பவரை மிகவும் உருக்கமாக காதலித்து வந்த நிலையில் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் நேற்றைய தினம் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.


இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அந்தவகையில் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனும் கலந்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது கடந்த ஆண்டு அமீர் கானிடம் இருந்து விவாகரத்து பெற்ற, அமீர் கானின் இரண்டாவது மனைவியான கிரண் ராவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். மேலும் முக்கியமான ஒரு விடயம் என்னவெனில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தாலும் அவ்வப்போது பிறந்தநாள் பார்ட்டி, குடும்ப விசேஷங்களில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இரா கான் தொடர்பாகப் பார்த்தோமானால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இரா மற்றும் நுபுர் ஆகியோர் நண்பர்களாக இருந்திருந்தனர். பின்பு அவரை காதலிக்கத் தொடங்கிய பின்னர் இருவரும் டேட்டிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

அத்தோடு சமீபத்தில் நடந்து முடிந்த இராவின் பிறந்தநாள் பார்ட்டியில் தன்னுடைய காதலருடன் காதலர் மற்றும் தந்து குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.


அதுமட்டுமல்லாது சைக்கிளின் வீரரான நுபுர் போட்டியில் கலந்து கொண்ட பின் இராவுக்கு முத்தம் கொடுத்து, அவருக்கு மோதிரம் மாற்றிய புகைப்படமும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. 


இதை தொடர்ந்து நேற்றைய தினம் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் மிகவும் பிரமாண்டமாக நடந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் அமீர் கானின் ரசிகர்களோடு இணைந்து பல திரைப்பிரபலங்களும் சமூக வலைத்தளம் மூலமாக தங்களுடைய வாழ்த்துக்களை இரா மற்றும் நுபுர் ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement