• Apr 30 2024

திருடனாக மாறிய ஆதி... 'பாட்னர்' திரைப்படம் சிரிக்க வைத்ததா..? சிந்திக்க வைத்தா..? திரைவிமர்சனம் இதோ..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் மனோ தாமோதரன் இயக்கத்தில், ஆதி நடித்துள்ள திரைப்படம் 'பாட்னர்'. இப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

அத்தோடு ராயல் பர்சுனா கிரியேசன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படமானது இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எனவே இப்படம் எப்படி இருக்கிறது என்பதனை அறிந்து கொள்வதற்காக முதலில் திரைவிமர்சனத்தை பார்ப்போம்.


கதைக்களம் 

அந்தவகையில் ஆதியும், யோகிபாபுவும் திருடச் சென்ற இடத்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெறுகின்றது. அதில் யோகிபாபு ஹன்சிகாவாக மாற அதன் பின்னால் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் உடைய ஒன்லைன் ஸ்டோரியாகும். 

மேலும் உயிரிழந்தவரின் டி.என்.ஏ.,வை நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் உடலில் செலுத்தி, இறந்தவரின் செயல்பாடுகளை அவர்களின் உடலில் கொண்டு வரும் மருந்து கண்டுபிடித்து அதில் வெற்றியும் பெறுகிறார் பாண்டியராஜன். இவரின் உடைய இந்த அற்புதக் கண்டுபிடிப்பை வெளிநாட்டில் இருந்து பாண்டியராஜனின் முன்னாள் மாணவரான ஜான் விஜய் திருட வருகிறார் . 

மறுபுறம் தான் வாங்கிய கடனுக்காக, தன்னுடைய சொந்தத் தங்கையை வட்டிக்காரனுக்கு திருமணம்  செய்து வைக்கும் நிலை ஹீரோவாகிய ஆதிக்கு வருகிறது. இதன் காரணமாக பணம் சம்பாதிக்க யோகிபாபுவுடன் சேர்ந்து திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். இந்த சமயத்தில் ஜான் விஜய் அசைன்மெண்ட் இவர்களிடம் வருகிறது.  இதற்காக வாங்கிய ரூ.50 லட்சம் பணத்தை அரசியல்வாதி ரவிமரியாவிடம், தான் வந்து கேட்டால் மட்டுமே தர வேண்டும் எனக் கூறி யோகிபாபு கொடுத்து வைக்கிறார். 

இந்நிலையில் ஆராய்ச்சி மருத்தை எடுக்க பாண்டியராஜன் லேப்-க்கு வரும் இடத்தில் தவறுதலாக மருந்து யோகிபாபுவுக்கு செலுத்தபட அவர் உடனே பெண்ணாக (ஹன்சிகா) மாறுகிறார். இதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யங்கள் மற்றும் கலவரங்கள் தான் இந்த படத்தின் உடைய மீதிக் கதையாக அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு 

இப்படமானது ஆதிக்கு சிறந்த ஒரு கம்பேக் படமாக அமையவில்லை என்றுதான் கூற வேண்டும்.

அதேபோல் இடைவேளைக் காட்சிக்குப் பின் வரும் ஹன்சிகா, ஹீரோயினாக வரும் பாலக் லால்வாணி, யோகிபாபு, ரோபோ ஷங்கர், ரவிமரியா, முனீஷ்காந்த், தங்கத்துரை எனப் பலர் நடித்திருந்தாலும், யாருடைய கதாபாத்திரங்களும், நடிப்பும் படம் பார்ப்பவர்களை பெரிய அளவில் கவரவில்லை. 

மேலும் வில்லனாக மிரட்டும் ஜான் விஜய் வரும் காட்சிகளும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. 


படம் எப்படி?

இப்படமானது தங்கச்சி சென்டிமென்ட், திருட்டு, அறிவியல் ஆராய்ச்சி போன்றவற்றை மையமாக கொண்டிருந்தாலும் திரைக்கதை மோசமாக அமைந்துள்ளது என்றுதான் கூற வேண்டும். 

படத்தில் சீரியஸ் என்பதே இல்லாமல் இருக்கிறது. திருடப்போகும்போது கூட ஒரு சீரியஸ் இல்லை. 

யாரும் தங்களுடைய முழுமையான நடிப்பினை வெளிப்படுத்தவில்லை. 

பாடல்களும் சொல்லும் அளவிற்கு இல்லாமல் படத்துக்கு தடையாக அமைந்துள்ளது. 

யோகிபாபு ஹன்சிகாவாக மாறி பெண்கள் குறித்து பேசுவது ரசிக்க கூடியதாக இருக்கிறது.

தொகுப்பு 

எனவே 'பாட்னர்' படமானது மொத்தத்தில் ரசிகர்கர்களை சிரிக்கவும் வைக்கவில்லை, சிந்திக்கவும் வைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement