• Sep 30 2023

Bigg Boss-7 முதல் போட்டியாளராக களமிறங்கும் பிரபல சினிமா நடிகர்... வெளியானது தகவல்... அடடே இவர் பெண்களின் கனவு நாயகன் ஆச்சே..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதுஅனைவருக்கும் தெரிந்ததே. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.


இந்த நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 7-ஆவது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோவும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் கமல்ஹாசன் கடலிற்கு நடுவே வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார்.


இதனையடுத்து சீசன் 7இன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மென்மேலும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றது. யார் யார் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்பதைக் காணப் பலரும் ஆவலுடன் உள்ளனர்.


இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது பிக்பாஸ் வீட்டினுள் முதலாவது போட்டியாளராக செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி முதல் போட்டியாளர் ரஞ்சித் இல்லையாம்.


அதாவது நடிகர் அப்பாஸ் தான் முதலாவது போட்டியாளராக அப்பாஸில் களமிறங்குகின்றார் எனக் கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது அப்பாஸ் வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக இவர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement