• May 05 2024

திடீரென மணமகள் கோலத்தில் தோன்றிய ஈரமான ரோஜாவே சீரியல் சுவாதி- பளிங்கு சிலை போல சூப்பராக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டாலும் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே. காதல் கதையை மையாக உருவாகியுள்ள இந்த சீரியலில் ரொமான்ஸிற்கு மட்டும் பஞ்சம் இல்லை எனலாம்.


மேலும் இதில் ஜீவா- ப்ரியா ஜோடி ,காவியா- பார்த்தீபன் ஜோடி என இரு காதல் ஜோடியின் திருமண வாழ்க்கை பற்றியே இந்த சீரியல் எடுத்துக் காட்டகின்றது. அத்தோடு ஜுவா-காவியா காதலித்த விடயம் எப்போது மாமியாருக்கு தெரிய வரும் எப்போது காவியா பார்த்தீபனுடன் இணைந்து வாழ்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.


மேலும் இதில் காவியாவாக பிக்பாஸ் மூலம் பிரபல்யமான காபிரில்லா நடித்து வருகின்றார். அதே போல ப்ரியாவாக சுவாதி என்பவரும் நடித்து வருகின்றனர். அத்தோடு சுவாதி தற்பொழுது திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் சுவாதி தன்னை மணப்பெண் போல அலங்கரித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement