• Apr 25 2024

தமிழ் சினிமாவில் பிறமொழித் தாக்கங்களே அதிகம் உள்ளது மிகவும் வேதனையளிக்கின்றது- நடிகர் கே.பாக்யராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாக்யராஜ் எழுத்தாளர்கள் தட்டுப்பாடு உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ்  சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய பாக்கியராஜ் கூறியதாவது 


நான் தனிப்பட்ட முறையில் கலைஞரின் எழுத்தை அதிகம் ரசிப்பவன், என்னுடைய எழுத்தை அதிகம் மதிப்பவர் கலைஞர் உடனான நட்பு நீண்டகாலமாக தொடர்பில் இருந்தவர். அதே போல் கலைஞர் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரின் நிகழ்விலும் சமமாக பங்கேற்றவன் நான்.., 

தமிழ் திரையை பொறுத்தவரையில் அனைவரும் உச்சரிக்கும் பெயர் கலைஞர் தான் என பேசினார். மேலும் சங்க தேர்தலுக்கு உறுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி. சமீபகாலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது.


பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை நோக்கி சில இயக்குநர்கள் படம் எடுக்கின்றனர், வெற்றி மாறன் போன்றோர் நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுகின்றனர். தமிழ் திரை உலகில் எழுத்தாளர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மை தான். தமிழ் நடிகர்கள் படங்கள் ஆந்திராவிலும் ஹிந்தியிலும் அதிகம் ஓடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. என தன்னுடைய பேட்டியில் கூறியுள்ள இவர், தமிழ் திரையுலகில் அதிகம் எழுத்தாளர்கள் வரவேண்டும் என்கிற ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார். 





Advertisement

Advertisement

Advertisement