• Apr 15 2026

’விக்ரம்’ கிளைமாக்ஸ் மாதிரியே ‘கங்குவா’ படத்திலும் ஒரு ட்விஸ்ட்.. முன்னணி ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சூர்யா நடித்து வரும்கங்குவாபடத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது டப்பிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்றும் அதில் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் நான்கு நாள் நடந்த இந்த படப்பிடிப்பில் சூர்யா இரண்டு நாள் நடித்துக் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய டிவிஸ்ட்டாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பிரபல நடிகர் என்ட்ரி ஆக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கமல்ஹாசன் நடித்தவிக்ரம்திரைப்படத்தில் கடைசி பத்து நிமிடத்தில் சூர்யா வந்து ட்விஸ்ட் ஏற்படுத்தியது போல்கங்குவாபடத்திலும் கடைசி 10 நிமிடத்தில் ஒரு பிரபல நடிகர் என்ட்ரி ஆக இருப்பதாகவும், இந்த கேரக்டரில் நடிப்பதற்காக ஒரு சில பிரபல பாலிவுட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அதில் நடிக்கும் நடிகர் யார் என்பதை முடிவு செய்த பின்னர் அவர்களுக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் பாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான சில முன்னணி ஹீரோக்களுடன் இந்த கெஸ்ட் ரோல் கேரக்டருக்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் மட்டும் உறுதி செய்யப்பட்டால்கங்குவாதிரைப்படம் வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement