• Mar 09 2026

கேப்டன் மில்லர் படத்தின் பெஸ்ட் சிங்கிள் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து  சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.


ஏற்கனவே இந்த படத்திலிருந்து முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கடந்த சில மாதமாக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்போது பர்ஸ்ட் சிங்கள் தனுஷ் குரலில் 'கில்லர் கில்லர்' என்கிற பாடலை வருகின்ற நவம்பர் 22ந் தேதி புதன்கிழமை அன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்த போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement