• Nov 02 2024

சந்தர்ப்பம் பார்த்து மாயாவை பழிவாங்கிய விஷ்ணு- ஆனாலும் மிஸ் பண்ணிட்டாரே- வைரலாகும் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


நடிகர் கமல் ஹாசன் பிக் பாஸ் 7ம் சீசனை கடந்த 7 வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.ஏற்கனவே கடந்த மூன்று வாரங்களுக்கு முன் ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தனர்.

இது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸியமாக இருந்தாலும், வீட்டிற்கு போட்டிபோட்டு வரும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் ஒரே நாளில் ஐந்து வைல்டு கார்டு என்ட்ரி என்பதால் அனைவரும் உறைந்து போனார்கள்.


இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிக் பாஸ் ஒரு விஷயத்தை கொண்டு வந்துள்ளார். இந்த வாரம் புதிதாக மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் வீட்டிற்குள் வரவுள்ளனர்.

அவர்களுக்கும் ஏற்கனவே வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியும் நடைபெறவுள்ளதாம். இந்த சூழலில் தற்பொழுது நாமினேஷன் குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

அதில் விஷ்ணு வெள்ளி ஸ்டார்ஸ் அதிகமாக வைத்திருப்பதால் இருவரை நேரடியாக நாமினேஷன் செய்யச் சொல்லி பிக்பாஸ் சொல்லுகின்றார். அப்போது விஷ்ணு, மாயா மற்றும் அக்ஷயாவை நேரடியாக நாமினேஷன் செய்கின்றார். இதனால் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement