• Apr 16 2026

முடிவுக்கு வருகிறதா கயல் சீரியல்... ஹீரோயினி வெளியிட்ட பதிவு...

shali / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் மனம் கவர்ந்த பல சீரியல்கள் இருக்கின்றன. இதில் சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் கயல் சீரியல். டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 2 அல்லது 3ம் இடத்திற்குள் இருந்து வருகிறது. கயல் மற்றும் எழில் ஆகியோரது திருமணம் தொடர்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.


பல்வேறு தடங்கல்கள் வருவது போலவும், அதை எல்லாம் தாண்டி எப்படி திருமணம் நடந்து முடிகிறது என்பதை தான் கடந்த பல வாரங்களாக இந்த சீரியலில் காட்டி வருகிறார்கள். திருமணம் முடிந்துவிட்டால் கயல் சீரியல் முடிக்கப்படும் என பேச்சு இருந்து வருகிறது. 


ஆனால் ஹீரோயினாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி அளித்திருக்கும் பதிலில் 'சீரியல் இப்போது முடியப்போவதில்லை. அடுத்து தான் இன்னும் பல ட்விஸ்ட்கள் வர போகிறது' என கூறி இருக்கிறார். தான் எங்கு சென்றாலும் இதே கேள்வியை கேட்கிறார்கள், அதனால் இது தான் உண்மையான பதில் என அவர் கூறி இருக்கிறார்.  



Advertisement

Advertisement