தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர் மற்றும் தொகுப்பாளராக தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள RJ பாலாஜி, சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, நடிகர் சூரி குறித்து அவர் பகிர்ந்த உணர்ச்சிகரமான நினைவுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அந்த நேர்காணலின் போது ஆர்.ஜே. பாலாஜி, “கொஞ்ச நாள் முன்னாடி தான் சூரி எனக்கு நண்பர் ஆனாரு. அவருக்கு என்ன சினிமாவில தெரியும். நான் 1999ல ‘சங்கமம்’ன்னு ஒரு படம் பார்க்கும் போது ஒரு சீன்ல கேட் முன்னாடி 100 பேர் நின்னுட்டு இருப்பாங்க.
அந்த 100 பேர்ல ஒருத்தரா நின்னுட்டு இருந்தவர் சூரி. அவர் ஹீரோவா நடிச்சு சினிமால பெரிய ஆளா வாறதுக்கு 25 வருஷம் ஆகியிருக்கு. அதனால யாருக்கும் எது வேணும் என்றாலும் நடக்கும். எனக்கும் நடக்கும், உங்களுக்கும் நடக்கலாம்.” என்று கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள் பலருக்கும் ஒரு பெரிய ஊக்கமாக மாறியுள்ளன. சினிமா உலகில் வாய்ப்பு கிடைப்பது மட்டுமல்ல, கிடைத்த வாய்ப்பை பிடித்து வைத்து தொடர்ந்து முன்னேறுவதும் மிகப்பெரிய சவாலாகும்.
அந்தவகையில், சூரியின் பயணம் சிறந்த உதாரணமாகும். இவ்வாறு, ஆர்.ஜே.பாலாஜி கூறிய கருத்துக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Listen News!