இந்திய திரையுலகை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “கல்கி 2898 ஏடி – 2” படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் ஹாசன் மற்றும் அமிதாப்பச்சன் இருவரும் மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகின் இரு பெரும் நாயகர்கள் ஒரே திரையில் தோன்றுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. 1980களில் இணைந்து நடித்த பிறகு, தற்போது சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்தித்துள்ளனர். “கல்கி 2898 ஏடி – 2” படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இருவரின் சந்திப்பு, வெறும் நடிப்பு கூட்டணி அல்ல; அது ஒரு தலைமுறை ரசிகர்களின் நினைவுகளை மீட்டெடுத்துள்ளது. இந்திய சினிமாவின் இரண்டு காலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நட்சத்திரங்கள், ஒரே பிரம்மாண்ட படத்தில் இணைவது திரைப்பட வரலாற்றில் முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.

இந்த பிரம்மாண்ட திட்டத்தை இயக்கி வருபவர் நாக் அஸ்வின். முதல் பாகத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்போது இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் – அமிதாப் பச்சன் இணைப்பு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
Listen News!