• Feb 02 2023

சினிமாவில் மட்டும் தான் கூட்டுக் குடும்பமா?- வாரிசு படத்தால் விஜய்யை விளாசிய பயில்வான் ரங்கநாதன்

Listen News!
stella / 4 weeks ago
image

Advertisement

Listen News!

தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு.இப்படம் வரும் 11ம் திகதி உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகியது.ட்ரெய்லர் வெளியாகிய வேகத்திலேயே கோடிக்கணக்கில் வியூவர்ஸையும் அள்ளிக் குவித்தது. இருப்பினும் வாரிசு திரைப்படம் ஏற்கனவே வெளியான பல படங்களின் காப்பி போல் இருப்பதாக நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.


இந்நிலையில் வாரிசு ட்ரெய்லர் குறித்த தனது விமர்சனத்தை வீடியோவாக ஷேர் செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதில் அவர் கூறியிருப்பதாவது, இதற்கு முன்பு இது போன்ற ஒரு கதையில் நடித்ததில்லை என்று கூறியிருந்தார் நடிகர் விஜய். படத்தில் கூட்டுக் குடும்பத்தின், சுவாரசியம், காதல், ஆக்ஷன் என அனைத்தும் உள்ளது. ட்ரெய்லரே ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் இருக்கிறது.

ராஷ்மிகா மந்தவானாவின் நடனம், பிரகாஷ் ராஜின் வில்லத்தனம், யோகி பாபுவின் காமெடி, விஜய்யின் பஞ்ச் டயலாக்குகள் என எல்லாமே நல்லா இருக்கு. இந்தப்படத்தில் தெலுங்கு நடிகரான சுமன் நடித்துள்ளார். வாரிசு படத்தில் மொத்த 4 ஹீரோக்கள் நடித்துள்ளனர். சுமன், சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ் ஆகியோர் என படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளது. ட்ரெய்லர் தொடங்கும் போதே இது கல்லால் கட்டப்பட்ட வீடு அல்ல என ஆரம்பிக்கிறார் விஜய்யின் அம்மா.


விஜய்யும் குடும்பத்தில் குறை இருக்கலாம், ஆனால் நாம் ஒரே குடும்பம் என கூறுகிறார் என படம் குறித்து கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், ஒரே குடும்பம் என விஜய் கூறுவது, தனது மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகளை சொல்கிறாரா? அவரது அம்மா ஷோபா, அவரது அப்பா சந்திரசேகர் ஆகியோர் தனி குடும்பமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் . மேலும் சினிமாவில் மட்டும்தான் கூட்டுக் குடும்பமா? சொந்த வாழ்க்கையில் ஏன் கூட்டு குடும்பமாக இல்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படத்தில் விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகள் சிறப்பு என குறிப்பிட்டுள்ள பயில்வான் ரங்கநாதன், வாலிப வயதில் மகன் உள்ள போதும் வாலிபனாக பலரின் கவனத்தை பெறுகிறார் . படத்தில் ராஷ்மிகா நல்லா கவர்ச்சி காட்டியுள்ளார் என்றும் இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது யோகி பாபு காமெடி வொர்க்கவுட் ஆகும் என்றும் அவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


வாரிசு படத்தில் அத்தனை அம்சங்களும் இடம் பெற்றுள்ளது என்றும், இந்தப் படத்திற்கு விஜய் 120 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்  விஜய்யின் வெற்றிக்கொடி தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நாட்டப்பட வேண்டும்  மேலும் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றும் தனது விமர்சன வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement