• Apr 20 2024

விக்ரமன் எனக்கு உடம்பே அப்படித் தான் இருக்கு- ஏடிகே சொன்ன வார்த்தையால் விழுந்து விழுந்து சிரித்த ஹவுஸ்மேட்ஸ்

ADK
stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

8 போட்டியாளர்கள் மாத்திரமே வீட்டுக்குள் உள்ள நிலையில்Ticket To Finale டாஸ்க் நடைபெறுகின்றது. அதன்படி மிதிவண்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் மாறி மாறி போட்டியாளர்கள் மூன்று சைக்கிள்களை இயக்க மற்ற போட்டியாளர்கள் முன்னாடியும் பின்னாடியும் மாறி மாறி ஏறிய படி இருக்கின்றனர்.


 ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் மாறி அமர்வதற்கு 10 வினாடிகள் மேல் எடுத்து கொண்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிகிறது.மிகவும் விறுவிறுப்பாகவும், அதே வேளையில் சிறப்பான டாஸ்க்காகவும் இது அமைந்திருந்தது. இந்த நிலையில், விக்ரமனை பார்த்து ADK கேட்ட விஷயம், பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.

மிதிவண்டி டாஸ்க்கில் இருக்கை இல்லாமல் முன் பக்க கம்பியில் இருக்கும் போது அது ஹவுஸ் மேட்ஸை பெரிய அளவில் சிரமத்தை உண்டாகி இருந்தது. அப்படி உட்கார்ந்ததால் ரச்சிதா சற்று அவதிக்கு உள்ளாக, இன்னொரு சைக்கிளில் முன்பக்க கம்பியில் இருக்கும் விக்ரமன் எப்படி உட்கார வேண்டும் என்றும் ரச்சிதாவுக்கு அறிவுறுத்துகிறார்.


இதனை மற்றொரு சைக்கிளில் முன் பக்கம் இருக்கும் ADK கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் விக்ரமனிடம், "ஏன் விக்ரமன் நானும் ரொம்ப நேரமா முன்பக்க கம்பியில் இருக்கிறேன். ஒரு கேள்வி கூட கேட்கல, ரச்சிதாவை பார்த்து அவ்வளவு கேட்கிறீங்க, அதான் யோசிக்கிறேன் என்ன நடக்குது இங்க" என ஜாலியாக குறிப்பிடுகிறார்.

இதற்கு பதில் சொல்லும் விக்ரமன், "அவங்க கால்ல அடிபட்டு இருக்குல்ல. அதனால தான்" எனக் கூறியதும், மறுகணமே எனக்கு உடம்பே அப்படித் தான் இருக்கு என்பது போல ADK சொன்னதும் அங்கிருந்த போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்க தொடங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement