• May 18 2024

மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து மரணமடைந்த பிரபல சீரியல் நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மராத்திய தொலைக்காட்சியில் லகே மஜி லட்கி, சுக் மானே நக்கி கே அஸ்தா, க்ரைம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபல்யமானவர் தான் பிரபல மராத்தி நடிகர் அரவிந்த் தாணு.

இவர் சீரியல்களில் மட்டுமல்லாது ஏக் ஹோதயா வால்யா என்ற மராத்தி மொழி படத்திலும் நடித்துள்ளார். இவரது இயல்பான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என தனி வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அரவிந்த் தாணு.

அப்போது மேடையிலேயே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் கவலைக்கிடமான நிலையில் இருந்த அரவிந்த் தாணு மரணம் அடைந்தார்.

அரவிந்த் தாணுவின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேடையில் நன்றாக பேசிக் கொண்டிருந்த பிரபல நடிகர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement