• Jun 26 2024

நடிகையுடன் தங்கியிருந்த பிரபல நடிகர்-கோட்டலிற்கு நேராக வந்த செருப்பை நீட்டிய மனைவியால் பெரும் சலசலப்பு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு.இவர் பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்திருந்தாலும் வாழ்க்கை அவ்வளவு நல்லதாக அமையவில்லையாம்.

அதாவது 60 வயதாகும் நரேஷ் பாபு இதுவரை மூன்று முறை திருமணம் செய்துள்ளாராம்.மேலும் இதில் இரண்டு முறை விவாகரத்து பெற்ற நரேஷ் பாபு, தற்போது மூன்றாவது மனைவியுடன் சண்டை வந்ததால் விவாகரத்துக்காக விண்ணப்பித்துள்ளாராம். அதுமட்டுமின்றி நடிகர் நரேஷ் பாபு 4-வது திருமணம் செய்ய தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷை 4-வதாக திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வந்தன.மேலும் நடிகை பவித்ரா லோகேஷும் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவராம்.

அத்தோடு நடிகர் நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். தான் அவரை விட்டு பிரிய முடிவெடுத்ததற்கு காரணமே பவித்ரா லோகேஷ் தான் என தெரிவித்த ரம்யா,

மேலும் தனக்கும் ரமேஷுக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், நரேஷும், பவித்ராவும், மைசூரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருப்பதாக அறிந்த ரம்யா அந்த இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது போலீசார் அங்கு வந்து ரம்யாவை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். எனினும் அதேபோல் ஒரே வீட்டில் தங்கி இருந்த நரேஷும், பவித்ராவும் வெளியே வந்தபோது செருப்பால் அடிக்க முயன்றார் ரம்யா.

இதையடுத்து போலீசார் நரேஷை பத்திரமாக அழைத்து சென்றனர். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நடிகர் நரேஷ் விசில் அடித்தபடி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement