• Jul 27 2026

சூர்யா தான் அடுத்த தளபதியா? பிரபல இயக்குநரின் பேச்சால் திரையுலகில் வெடித்த சர்ச்சை.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்போது முழுமையாக அரசியலுக்கு நுழைந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது சினிமா வெளியேற்றம் குறித்து திரையுலகில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில், விஜய் விட்டுச் சென்ற சினிமா இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.


இது குறித்து இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்குச் சென்றதால் தமிழ்சினிமாவில் எந்தவித வெற்றிடமும் உருவாகாது. அந்த இடத்தை நிரப்ப பல திறமையான முன்னணி நடிகர்கள் உள்ளனர் என்றும், குறிப்பாக சூர்யா போன்ற நடிகர்கள் தங்களது நடிப்பு திறமை மற்றும் ரசிகர் ஆதரவின் மூலம் அந்த இடத்தை எளிதில் நிரப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தமிழ் சினிமாவில் புதிய கதைகள் மற்றும் புதிய நட்சத்திரங்களின் எழுச்சி தொடரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த கருத்துகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement