• Apr 15 2026

மீண்டும் வரும் மேக்னா? அர்ஜுனின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில்  ஒன்றுதான் தமிழும்  சரஸ்வதியும்.

இந்த சீரியலில் மேக்னா உயிரிழந்த நிலையில், மீண்டும் அவர் வருவாரா? இல்லையா? என்று தான் அதிக ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார் மேக்னாவாக நடிக்கும் சீரியல் நடிகை.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது மேக்னா உயிரிழந்த விவகாரத்தில், சரஸ்வதி சிக்கி, சிறையில் காணப்படுகின்றார். அவரை மீட்பதற்காக தமிழ் படாத பாடு படுகிறார். எனினும், சரஸ்வதிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, மீண்டும் அவர் சிறைக்கு செல்கிறார். 


அதாவது சரஸ்வதிக்கு எதிராக ஆட்டோக்காரனும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க, சரஸ்வதி ஜெயிலில் இன்னும் பாடுபட வேண்டும் என்று ஜெயில் வார்டன்டுக்கும் லஞ்சம் கொடுக்கப் போகிறார்கள்.

இவ்வாறு சரஸ்வதியை வெளியே எடுக்க முடியாமல் அர்ஜுன் பக்காவாக காய் நகர்த்தி வரும் நிலையில், தமிழும் சரஸ்வதி மீட்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் காணப்படுகிறார்.

இனிமே மேக்னா உயிரோடு வந்தால் தான் கதை நன்றாக இருக்கும் என்பது பல ரசிகர்களது எதிர்பார்ப்பு.

இந்த நிலையில், இந்த சீரியலில் மேக்னாவா நடிக்கும் நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், என்னுடைய சின்னப் பயணம் முடிவடைந்தது. இனி மீண்டும் ஒரு நீண்ட பயணத்தில் சீக்கிரம் சந்திக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவர் இனி தமிழும்  சரஸ்வதியும் சீரியலில் வர மாட்டார் என்று தெள்ளத் தெளிவாகியுள்ளது.

Advertisement

Advertisement