கடந்த 2005ல் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி.இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்.
மனநல பிறழ்வால் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பனின் மனைவியை அதிலிருந்து மிகவும் புத்திசாலித்தனமாக அவர் காப்பாற்றுவதாக கதைக்களம் காணப்பட்டது. இந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
லைக்கா தயாரிக்கவுள்ள இப்படத்தில் ரஜினிக்கு பதில் லாரன்ஸ் இணைந்துள்ளார்.மேலும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நடிகர் லாரன்ஸ் தனது குருவான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த வடிவேலுவை தவிர மற்ற எல்லாமே இந்த இரண்டாம் பாகத்துக்கு புதியவர்கள் தான்.
குறிப்பாக சந்திரமுகி கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவலை படக்குழு இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 'சந்திரமுகி 2 ' படத்தில் 5 நடிகைகள் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் யார்? யார்? என்பது குறித்த தகவலும் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன் படி, ஏற்கனவே நடிகை லட்சுமி மேனன் இப்படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது போல், 5 ஹீரோயின்களில் ஒருவராக லட்சுமி மேனன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
மேலும் இதை தொடர்ந்து, பிரபல நடிகை அஞ்சலி, சிருஷ்டி டாங்கே, மஹிமா நம்பியார், மஞ்சிமா மோகன், ஆகியரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் ஹீரோயின்கள் குறித்த தகவலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்
- நடிப்பை தாண்டி இப்படியான தொழிலும் ஈடுபடுகின்றார்களா தமிழ் நடிகர்கள்..!
- நடிகை சத்யாபிரியா மகளா இது-அடேங்கப்பா பார்க்க சினிமா நடிகை போல இருக்கிறாரே
- விஜய்யின் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு வேடமா?
- சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் தந்தையை பார்த்துள்ளீர்களா..? வைரலாகி வரும் புகைப்படம்..!
- இந்த சீரியல் நடிகைக்கு வயது இவ்வளவா…? இன்னும் திருமணமும் ஆகலையா? – ஷாக்கான ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!