• Oct 08 2024

நாளைக்கு இணையத்தை தெறிக்க விடப்போறாரு நடிகர் சூரி! தரமான அப்டேட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக காணப்படும் சூரியின்  நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் தான் விடுதலை. இந்த திரைப்படம் சூரியை புது அவதாரத்திற்கு உள்ளாக்கி இருந்தது. நாயகனாக அவர் இதில் களம் இறங்கி இருந்தார். அவரது நடிப்பு மட்டுமின்றி இந்த படத்திற்காக அவரிடத்தில் காணப்பட்ட அத்தனை முயற்சிகளும் பலராலும் பாராட்டப்பட்டது.

விடுதலை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூரி நடித்த படம் தான் கருடன். இந்த திரைப்படத்தில் விடுதலைப் படத்தில் இருந்து ஒரு படி மேல் சென்று தனது நடிப்பை அசுர வேட்டை ஆடி இருந்தார். இதுவரை காலமும் சூரியை காமெடியாக பார்த்த நடிகர்கள் இவருக்குள் இவ்வளவு திறமையா என வியக்கும் அளவுக்கு தனது அபார நடிப்பை வெளியிட்டு இருந்தார்.

அதன் பின்பு சூரி நடிக்கும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பே  காணப்படுகின்றது. அவர் எப்படிப்பட்ட திரைகதைகளை தேர்ந்தெடுப்பார்? அதில் அவரது கேரக்டர் என்ன? படம் எப்படி இருக்கப் போகின்றது என்று அதிகப்படியான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகின்றன.


2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருந்துக்கு  பரிந்துரைக்கப்பட்டகூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் தான் பிஎஸ் வினோத் ராஜ். இவரது படைப்பாக தற்போது கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதோடு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 23ஆம் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

கொட்டுக்காளி திரைப்படம் சூரி நடிப்பில் வெளியான விடுதலை மற்றும் கருடன் திரைப்படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என ஏற்கனவே சூரி கூறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement