கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான சந்தானம், சூரி மற்றும் யோகி பாபு, தற்போது கதாநாயகர்களாக தங்கள் திரையுலக பயணத்தை நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த மூன்று நடிகர்களும் ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக மாறியுள்ளது.
மேலும் மே 16ம் தேதி சந்தானம் நடிப்பில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' சூரி நடிப்பில் 'மாமன்' மற்றும் யோகி பாபு நடிப்பில் 'ஜோரா கைய தட்டுங்க' ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த படங்கள் மூன்றின் மீதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கிய இவர்கள் ஹீரோவாக ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளனர்.
இருப்பினும் இவர்கள் ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பதையே ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். சமீபத்தில் 12 ஆண்டுகள் இருப்பில் இருந்து வெளியாகிய "மத கஜ ராஜா " படத்தில் சந்தானம் காமெடியனாக நடித்ததை தொடர்ந்து ரசிகர்கள் வேண்டுகோளிற்கிணங்க இவர் சிம்புவின் 50 ஆவது படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!