• May 17 2026

யுவன்ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. யார் செய்த சதி?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் இன்று காலை திடீரென முடங்கியதை அடுத்து அவரே இந்த பக்கத்தை டெலிட் செய்து விட்டதாகவும் ’கோட்’ படத்தில் இடம்பெற்ற ’விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தற்காலிகமாக முடக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜாவே தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கம் இன்று காலை முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கி இருப்பதாகவும் அதை சரி செய்யும் விதத்தில் தனது குழுவினர் முயற்சி செய்து வருவதாகவும் விரைவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மீட்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து யுவன் சங்கர் ராஜாவே தனது பக்கத்தை டெலிட் செய்யவில்லை என்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் அவரது பக்கம் முடங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.



இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதா? அல்லது ஹேக்கர்களின் சதியா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த ’விசில் போடு’ என்ற பாடல் 30 மில்லியனுக்கும் மேலாக பார்வையாளர்கள் பெற்றதை அடுத்து பொறாமை காரணமாக யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாராவது ஹேக் செய்திருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement