தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். தற்பொழுது வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் பேசிய விஜய், “தமிழ் நாடு தான் விஜய், இந்த விஜய் தான் தமிழ்நாடு. வரப்போற இந்தத் தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். இதுக்கு நடுவுல இந்த NDA, டெல்லி எல்லாம் கிடையாது. தூயசக்தி TVKவுக்கும் தீயசக்தி DMKவுக்கும் நடக்கிற போர்.
இப்படி உக்கிரமா இருக்க இந்தப் போரில ஒன்னத்துக்கும் உதவாத பால் டப்பாவ உருட்டிக்கிட்டு காமெடி வேற இந்த ஆட்சியில தான் தமிழ்நாடு சூப்பர் மாநிலமா இருக்காம். உங்க ஆட்சியில தான் தமிழ்நாடு சூப்பர் மாநிலமா இருக்காம். உங்க ஆட்சியில தமிழ்நாடு சூப்பர் மாநிலமா இல்ல.. Super Stand Up Comedian நடத்துற மாநிலமா மாறிடுச்சு..” என்று தெரிவித்தார்.
அவரது இந்த உரை கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
விஜய் தனது உரையில் தமிழக முதலமைச்சர் M. K. Stalin தலைமையிலான ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். அத்துடன், வேலூர் கூட்டத்தில், கட்சியின் அடிப்படை கொள்கைகள், தேர்தல் திட்டம் மற்றும் பிரச்சார யுக்திகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Listen News!