• May 08 2025

நீ போட்டது தப்புக் கணக்கு பாக்கியா..! கோபத்தின் உச்சியில் எழில்..! டுடே எபிசொட் வேறலெவல்!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா கடை ஓனருக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்கிறதை பாத்த செல்வி இதைக் கொடுக்கத் தான் இப்ப வந்தனாங்களா என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா இண்டைக்குத் தான் நல்ல நாள் அதுதான் பணம் கொடுக்க வந்தேன் என்று சொல்லுறார். இதனை அடுத்து ஓனர் அக்ரிமெண்டில சைன் வைக்கச் சொல்லுறார். பின் பாக்கியா இங்க கொஞ்சம் மாத்த வேண்டியிருக்கு இண்டையில இருந்தே வேலைய தொடங்கிறேன் என்று சொல்லுறார்.

அதைத் தொடர்ந்து செல்வி எல்லாரோட பேச்சையும் மீறி ஒரு மாதிரி கடையை வாங்கனும் என்று முடிவு பண்ணிட்ட என்கிறார். அதுக்கு பாக்கியா ஹோட்டல் கொஞ்சம் பிக்அப் ஆனதுக்கு பிறகு எல்லாரோட பயமும் போயிடும் என்று சொல்லுறார். இதனை அடுத்து எல்லா பொருளும் வாங்கனும் என்று செல்வி சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா எல்லா வேலையையும் சீக்கிரம் முடிச்சிருவோம் என்கிறார்.


இதனை அடுத்து ஈஸ்வரி கோபியிடம் ஹோட்டல் பற்றி கதைச்சுக் கொண்டிருக்கிறார். அப்ப பாக்கியா வாறதப் பாத்த ஈஸ்வரி அட்வான்ஸ் வாங்கிகொண்டு வந்திட்டியா என்று கேக்கிறார். அதைக் கேட்ட பாக்கியா நான் அத வாங்கல என்று சொல்லுறார். மேலும் நான் அங்கதான் ஹோட்டல் தொடங்கப் போறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஈஸ்வரி கோபப்படுறார்.

அதனை அடுத்து எழில், அம்மா நீ கொஞ்ச நாள் பொறுத்து ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட எடுக்கலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா யார் என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்ல நான் ஹோட்டல் திறக்கத் தான் போறேன் என்கிறார். இதைத் தொடர்ந்து கோபி உனக்கு ஏதும் ஹெல்ப் வேணும் என்றால் வெளிப்படையா என்னட்ட கேள் என்று பாக்கியாட சொல்லுறார். இது தான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement