• May 07 2024

''உண்மை தெரியாமல் ஒருவரை பற்றி தவறாக பேசாதீர்கள்'' - ரோபோ சங்கர் மகள் இந்திரஜா போட்ட வைரல் பதிவு..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்து தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய மகளான இந்திரஜா சங்கரும் விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இப்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்திரஜா சங்கர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் ஒரு பிரபலமாக கலந்து கொண்டு தன்னால் முடிந்த அளவிற்கு பிற போட்டியாளர்களுக்கு டப் கொடுத்து இருந்தார்.

ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சியில் இந்திரஜா கலந்து கொள்ளும்போது இவரால் எல்லாம் எப்படி இதில் தாக்குப் பிடிக்க முடியும் என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பல நாட்கள் இந்த நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருந்தார்.

அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்திலும் ஒரு கால் பந்தாட்ட வீராங்கனையாக கலக்கி இருப்பார். இப்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில்  இந்திரஜா சங்கர் தனக்கு விரைவில் திருமணம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.அதோடு தான் தன்னுடைய மாமாவை தான் திருமணம் செய்யப் போகிறேன் என்றும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தனது அப்பாவான ரோபோ ஷங்கருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஒருமுறை ராஜா எப்போதும் ராஜா...❤️ நீங்க எப்பவுமே ராஜா அப்பா…😍👑

ஒரு குட்டி கருத்து…💡

உண்மை தெரியாமல் ஒருவரை பற்றி தவறாக பேசாதீர்கள்... ❤️என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement