• Nov 13 2025

அநியாயம் பண்ணுவீங்க... அதை தட்டி கேட்க கூடாதா.? பாருவை வெளுத்து வாங்கிய கனி.!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 9 இப்போது ஒளிபரப்பாகி 8 நாட்கள் ஆன நிலையில், வீட்டிற்குள் சண்டைகள் கருத்து வேறுபாடுகள் என ரசிகர்களின் கவனத்தை அந்நிகழ்ச்சியானது ஈர்த்துவருகின்றது. இந்நிலையில் பார்வதி மற்றும் கனி இடையே நடந்த கடுமையான உரையாடல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாக வைரலாகியுள்ளது.


சமையல் அறையில் மேசை அருகே அமர்ந்து நடைபெற்ற இந்த உரையாடல், உணர்ச்சிமிகுந்த, நேர்மையான விமர்சனங்களால் நிறைந்ததாக காணப்படுகின்றது. இது பார்வதி செய்த ஒரு சிறிய பிரச்சனையை தாண்டி, அவரது நடைமுறைகள் மற்றும் அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பும் அளவில் முடிந்துள்ளது.

பார்வதி சமையல் அறையில் உள்ள மேசையில் இருந்து இப்படித் தான் இருப்பேன் எனக் கூறியதைக் கேட்ட கனி கோபத்தில் பொங்கியெழுந்துள்ளார்.


அதன்போது, “சூப்பர் டீலக்ஸிற்கு எந்த கொம்பும் முளைக்கல.. நீங்க அநியாயமா ஒரு விஷயம் பண்ணுவீங்க... அத யாரும் கேட்க கூடாது.. கேட்டா அப்புறம் என்னை கார்னர் பண்றாங்கன்னு சீன் கிரியேட் பண்ணுவீங்க… அத பார்த்திட்டு நாங்க வாயை மூடிக்கிட்டு போகணுமா?... அறிவிருக்கிறவங்களுக்கு தான் புத்தில இறங்கும்... சுவத்து கிட்ட பேசுறது மாதிரி தான் இருக்கு உங்க கிட்ட பேசுறது!”என்றார் கனி. 

இதன்போது பார்வதி எந்தவொரு ரியாக்ஷனும் கொடுக்காமல் அப்படியே இருந்தார். அத்துடன், மற்ற போட்டியாளர்களும்  அமைதியாக இருந்தனர், சிலர் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

Advertisement

Advertisement