• Apr 30 2024

வெளியானது ஹீரோவாக யோகிபாபு அசத்தும்... 'லக்கி மேன்' படத்தின் டீசர்...!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் களமிறங்கி கலக்கி வருபவர் தான் யோகிபாபு. இவர் தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சுகளினால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்துள்ளார்.


படத்தின் கதை அந்தளவிற்கு நன்றாக இல்லாவிடினும் யோகிபாபுவின் நகைச்சுவைக்காகவே பல படங்கள் ஓடிய வரலாறும் உண்டு. அந்தளவிற்கு மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவராக விளங்கி வருகின்றார். அத்தோடு பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக் கொண்டுமிருக்கின்றார்.


அந்தவகையில் தற்போது இவர் நடிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், சான் ரோல்டன் இசையில் லக்கி மேன் படம் வெளியாக உள்ளது. இப்படத்திலும் யோகி பாபு கதாநாயகனாகவே நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் உடைய டீசர் வெளியாகி பயங்கர வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement