• May 03 2024

யோகிபாபு மற்றும் ஓவியா கூட்டணியில் அமையும் பூமர் அங்கிள் படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் விமல் நடிப்பில் வெளியான களவாணி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஓவியா. இப்படத்தைத் தொடர்ந்து மெரினா கலகலப்பு என சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராகக் கலந்து கொண்டு நேர்மையாக விளையாடியதன் மூலமே மிகவும் பிரபல்யமானார். இவருக்காக ரசிகர்கள் ஆர்மிகள் எல்லாம் ஆரம்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் இவருக்கு படவாய்ப்புக்கள் எல்லாம் குவியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் குறைவான வாய்ப்புக்களே கிடைத்து வருகின்றது.

இந்த நிலையில் யோகி பாபு உடன் ஓவியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘பூமர் அங்கிள்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.ஸ்வதீஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement