• Apr 14 2026

தவறான முன்னுதாரணம் விஜய்.. கல்யாணத்தில் த்ரிஷாவுடன் என்ட்ரி -தயாரிப்பாளர் காட்டம்

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தற்பொழுது அதிகமாக பேசப்படும் விஷயமாக நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டது மாறியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருமண நிகழ்ச்சிக்கு விஜய் மற்றும் த்ரிஷா ஒரே காரில் இறங்கி வந்து, மணமக்களை சந்தித்து வாழ்த்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் நிகழ்ச்சியில் அருகருகே நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. இந்த புகைப்படங்களே தற்போது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பல்வேறு கருத்துக்களை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் அதிகமாக பேசப்படுவதற்கான காரணமாக நடிகர் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. கடந்த சில நாட்களாக அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதாவது, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதில் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் கூறப்படும் செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆனால் இந்த தகவல்கள் குறித்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளிவந்ததால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் சிலர் இதை சாதாரண நிகழ்வாகவே எடுத்துக் கொண்டாலும், மற்றவர்கள் பல்வேறு ஊகங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


இதற்கிடையில், பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் இந்த விவகாரம் குறித்து தனது சமூக எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் நேரடியாக யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், சமூகத்தில் முன்னுதாரணமாக இருப்பவர்களின் பொறுப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், “நேர்மையான மற்றும் மரியாதையான வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக வாழும் பொறுப்பை ஒருவர் புறக்கணித்தால், மக்களிடம் அவர் மரியாதையை இழப்பது உறுதி. லட்சக்கணக்கான ரசிகர்களால் பின்பற்றப்படும் ஒருவர் அவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை உருவாக்குவது வேதனையை அளிக்கிறது” என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement