• May 05 2024

வாவ் ...வேற லெவல் அப்டேட்களை குவிக்கும் 'பொன்னியின் செல்வன் 2'.. என்ன தெரியுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. 

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படமாக 'பொன்னியின் செல்வன் -2' வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் ஆந்தம் வருகிற 15-ஆம் தேதி அண்ணா பல்கலை கழகத்தில் மாலை 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement