• May 18 2024

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்காதா?- மலேசியாவில் ஏற்பாடுகளை ஆரம்பித்த படக்குழு

stella / 9 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. இவர்கள் கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது. 7 ஸ்க்ரீன்ஸ் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.அத்தோடு இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான 'நான் ரெடி' பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 


அதேபோல், சஞ்சய்தத் பிறந்தநாளில் அவரது ஆண்டனி தாஸ் கேரக்டரின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.இதனை அடுத்து தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லியோ படத்தின் இசை வெளியூடடு விழாவும் நடைபெறவுள்ளதாம்.விஜய் பட விழாக்கள் பெரும்பாலும் சென்னையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், லியோ இசை வெளியீட்டு விழா மதுரை, கோவை அல்லது திருச்சி என எதாவது ஒரு நகரில் நடைபெறும் என செய்திகள் வெளியாகின. 


ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, லியோ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்து முடிப்பதற்காக தயாரிப்பாளர் லலித் குமார் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் விஜய்யின் லியோ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடப்பது உறுதியாகியுள்ளது.


Advertisement

Advertisement