• May 04 2024

விஜய்யுடன் நடிக்க மாட்டேன்… மைக் மோகனின் பகிரங்கமான முடிவு-காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!


விஜய்யின் 66வது படம் தான் வாரிசு.இப்படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி இயக்குகின்றார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். விஜய் படங்களுக்கே உரிய ஆக்ஷன், காமெடியுடன் குடும்ப சென்டிமெண்டை பிரதானமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகின்றது.

மேலும் பொங்கல் ரிலீசை மையமாக வைத்து இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது விசாகப்பட்டினத்தில் சூட்டிங் நடைபெற்று வருகின்றது.மேலும்  இந்தப் படத்தின் சீன்கள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளன.



தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் இவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க 80ஸ் காலகட்டத்தில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருந்த மைக் மோகன் அவர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.



ஆனால் மைக் மோகன் நான் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் எனக்கூறி இப்படத்தை மறுத்திருக்கிறார். மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது மைக் மோகன் ஹரா என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement