• May 04 2024

படம் வெளியாகி 5 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் தசரா திரைப்படம்- கொண்டாடி வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் போன்ற பான் இந்தியா படங்கள் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம் தான் தசரா. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா என்கிற அறிமுக இயக்குநர் இயக்கி உள்ளார்.

 இப்படத்தில் நானியும், கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடித்துள்ளனர். இதற்கு முன் நேனு லோக்கல் என்கிற படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் தற்போது தசரா மூலம் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.


தசரா திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. விமர்சகர்களிடம் கலவையான விமர்சனம் பெற்றாலும் ரசிகர்கள் நல்ல வரவேற்பைப் கொடுத்துள்ளனர். 


தொடர்ந்து படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலை கொடுத்து வரும் இப்படம் உலகம் முழுவதும் முதல் ஐந்து நாட்களில் ரூ. 92 கோடி வசூல் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் அறிவித்துள்ளனர். ஓரிரு நாளில் ரூ.100 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Advertisement

Advertisement

Advertisement