சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், மீனாவுக்கு புதிதாக கிடைத்த திருமண மண்டப டெக்ரேசன் ஆர்டரை செய்வதற்கு காசு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இதனால் முத்துவும் மீனாவும் ரவி ஸ்ருதியிடம் கேட்கச் சொல்லுகின்றார்கள். அதற்கு ரவியும் ஸ்ருதியும் போட்டி போட்டு காசு அனுப்பி வைக்கின்றார்கள்.
முதலில் ரவி தான் கொடுப்பதாக சொல்ல, ஸ்ருதி நானும் கொடுக்கின்றேன் என்று சொல்லுகின்றார். இதனால் அதன் பின்பு இருவரும் சரிசமமாக பிரித்து மீனாவுக்கு அனுப்புகிறார்கள். இதன் போது ரவி, நீ எனக்கு படிக்கிற காலத்துல நிறைய செய்திருக்க எனக்கு இப்பதான் இப்படி உதவி செய்ய கிடைச்சிருக்கு என்று முத்துவுக்கு சொல்லுகின்றார்.
இதை தொடர்ந்து விஜய் பரதநாட்டிய வகுப்பில் இருக்க அங்கு இருந்த சிந்தாமணிக்கு போன் வருகின்றது. இதன்போது புதிதாக வந்த ஆர்டரை மீனாவுக்கு கொடுத்து விட்டார்கள் என்று சிந்தாமணியின் ஆட்கள் அவருக்கு சொல்லுகின்றார்கள்.
இதனால் கோபமடைந்த சிந்தாமணி இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று விஜயாவிடம் மீனாவை பற்றி தப்பாக பேசுகின்றார். அதாவது தான் மீனாவுடன் பேசிய போது அவர் நான் வேலைக்கு செல்லவில்லை என்றால் எனது மாமியார் என்னை கணக்கெடுக்க மாட்டார்.. அவருடைய கொட்டத்தை அடக்கத்தான் வேலைக்கு செல்லுகின்றேன் என்று மீனா சொன்னதாக விஜயாவிடம் சொல்லுகின்றார்.
மேலும் புதிதாக அவருக்கு ஒரு திருமண மண்டப டெக்ரேசன் ஆர்டர் கிடைத்திருக்கின்றது. அதனை செய்ய விடாமல் தடுத்தாலே போதும் அதற்குப் பிறகு மீனாவின் முயற்சி எதுவும் பலனளிக்காது என்று விஜயாவுக்கு சொல்லுகின்றார். விஜயாவும் அதை நம்பி வீட்டுக்கு வந்து இப்படித்தான் என்னைப் பற்றி பேசிக்கொண்டு திரிகிறாயா என மீனாவுக்கு சரமாரியாக திட்டுகின்றார்.
ஆனாலும் அண்ணாமலை இந்த விஷயத்தை யார் உனக்கு சொன்னது எனக் கேட்க, அவர் நம்பிக்கையான ஆட்கள் தான் சொன்னார்கள் என சிந்தாமணியின் பெயரை சொல்ல மறுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!