• Feb 07 2025

முன்னாள் கணவர் பற்றி எதுவும் கதைக்க வேண்டாம் - நடிகை சமந்தா ஓபன் டாக்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவில் தனது  சிறந்த நடிப்பால் அதிகளவான ரசிகர்களை தன்னகத்தே கொண்டவரே சமந்தா. இவர் தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அதிகளவான படங்களை நடித்துள்ளார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான பாணா காத்தாடி , நான் ஈ , கத்தி , தெறி மற்றும் தங்கமகன் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

சமந்தா 2017ம் ஆண்டு தனது காதலன் நாக சைதன்யாவை கோவாவில் திருமணம் செய்து இருந்தார். திருமணத்தின் பின்னர் இருவரும் சந்தோஷமாகவே தமது வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கொண்டமையினால் 2021ம் ஆண்டு தமது திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து விட்டனர்.


இது ஒட்டுமொத்த சமந்தாவின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி இருந்தது. தற்போது சமந்தா நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்நேர்காணலில் தனது கடந்த கால திருமணவாழ்க்கை பற்றி கதைத்துள்ளார்.

அதில் நாக சைதன்யா அடுத்த திருமணம் செய்துள்ளார். அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்று நடுவர் கேட்டிருந்தார். அதற்கு சமந்தா மற்றவர்கள் என்ன செய்தாலும் எனக்கு அதைப் பற்றி எந்தவிதமான வருத்தமும் இல்லை எனக் கூறியிருந்தார். சமந்தா இப்படி கூறியது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement