• May 03 2024

மறுபடியுமா..? விஜய் டிவி புகழால் ஷாக்கான ரசிகர்கள்-கசிந்த புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் புகழ். இதில் இவர் செய்த டைமிங் காமெடிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி புகழின் கெரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. 

இதனால் பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று நடித்து வருகின்றார்.அத்தோடு யோகிபாவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றார் என்பதும் முக்கியமாகும்.அதுமட்டுமின்றி இவர் ஹீரோவாகவும் மிஸ்டர் ஜூ கீப்பர் என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.



இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் புகழ், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. 



விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டுள்ளாராம்.இந்நிலையில் இவர் பற்றி பல தகவல்கள் சோசியல் மீடியாவில் கிசுகிசுத்த வண்ணம் உள்ளது.அதாவது இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் புகழும் பென்சியாவிற்கும் பதிவு திருமணம் நடந்துள்ளது.அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




இவ்வாறு இருக்கையில் மூன்றாவதாக அதே காதலியை முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்துள்ளாராம்.அதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.




அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது....என் தந்தை அன்பிற்கு ஒரு முறை…என் தாய் அன்பிற்கு ஒரு முறை…என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை…வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டாள்.. மேலும் ஒரு முறை தயார்.. .இந்தியனாக இருக்கிறேன்எல்லா புகழும் இறைவனுகே🙏🏻@bensipugazh என பதிவிட்டுள்ளார்.ரசிகர்கள் பலரும் இதற்கு வாழ்த்து கூறினாலும் சிலர் எத்தனை தடவை தான் திருமணம் செய்வீர்கள் என புலம்பி தவிக்கிறார்களாம்.



Advertisement

Advertisement

Advertisement