• May 04 2024

லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு விஜய்யின் மனைவியும் வருவாரா?- கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 19ம் தேதி வெளியான திரைப்படம் தான் லியோ. இந்தத் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.சர்வதேச பாக்ஸ் ஆபீசில் கடந்த 11 நாட்களில் இந்தப் படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் நாளைய தினம் இப்படத்தின் வெற்றி விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.லியோ படத்தின் எந்தவொரு ப்ரமோஷனுக்கும் நடிகர் விஜய் கலந்து கொள்ளாத நிலையில், லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு நடிகர் விஜய் பங்கேற்பாரா? என்கிற கேள்வியே முதற்கட்டமாக எழுந்துள்ளது. 


இதுவரை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் லியோ வெற்றி விழா குறித்த அறிவிப்பை வெளியிடாத நிலையில், இன்று அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்திலேயே கமல் அப்பியரன்ஸ் இருந்த நிலையில், லியோ வெற்றி விழாவில் உலகநாயகன் கமல் பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 


இந்நிலையில், அந்த வெற்றி விழாவுக்கு நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் சினிமா இயக்குநராக அறிமுகமாக உள்ள மகன் ஜேசன் சஞ்சய் இருவரும் வருகை தருவார்களா? என்கிற கேள்வி தற்போது சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement