• May 02 2024

ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யுமா வாத்தி? கொண்டாடத்தயாராகும் ரசிகர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. இந்தப் படத்தை சித்தாரா எண்டெர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா தயாரித்துள்ளனர்.இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகின்றார்.அத்தோடு படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகின்றார்.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.நாளை வெள்ளிக்கிழமை  ரிலீசாகும் தனுஷின் வாத்தி படத்தை லியோ படத்தை தயாரிக்கும் SEVEN SCREEN STUDIO நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.

இந்த படத்தினை  குறித்து நெட்டிசன்கள் கூறுகையில்,வாத்தி படம்  ரிலீஸ் ஆகப்போகுது இந்த படத்தை சில நாட்களுக்கு முன்பு படம் தயாரிப்பு நிறுவனங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் எல்லாரும் பார்த்து திருப்தி அடைந்தார்களளாம் . என்ன காரணம் என்றால் படத்தில் 4 இடத்தில எமோஷன் கட்டங்கள் இருக்காம் . அதை பார்த்தவுடன் பெரிய நம்பிக்கை வந்துவிட்டதாம்  திருச்சிற்றம்பலம் படம் மாதிரி  ஃபேமிலி ஆடியன்ஸ்  இதனை தியேட்டருக்கு கொண்டு வந்துவிடுவார்கள்  என்று அவர்களுக்கு ஹப்பி வந்துவிட்டதாம் .

இந்த படத்தின் இயக்குநர் மிகவும் மென்மையான மனிதர் . எந்த சச்சரவுக்கும் போகமாட்டார் .பல வருடங்களாக இந்த பணியில் இருக்கிறார் .இயக்குநர் கஸ்தூரி ராஜாவின்  அசிஸ்டன்ட் ,அதனால தனுஷ் பக்கத்திலேயே வச்சிருக்கிறாராம் .

மேலும் இப்படத்தில் நடிகர் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர் கெட்டப்பில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.இந்த படத்திற்காக தனுஷ் ரசிகர்கள் செம குஷியில் காத்திருக்கிறார்கள்.

எனவே வாத்தி படம் ரிலீசாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை திருப்திப்படுத்தி நல்ல விமர்சங்களைப் பெறுமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement