• Jan 19 2025

நான் இதை கீர்த்தி கிட்ட சொல்லி புலம்பி இருக்கிறேன்... ரசிகர் கைத்தட்டு கிடைத்ததே இல்லை... மேடையில் கண்கலங்கிய கீர்த்தி... வெளிப்படையாக பேசிய அசோக்செல்வன்...

Kamsi / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் அசோக் செல்வன். வித்தியாசமான கதைகளை தெரிந்தெடுத்து நடித்து வரும் இவர் சூது கவ்வும் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இதனைத் தொடர்ந்து பீசா 2, தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் ஆகிய படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.


"ப்ளூ ஸ்டார்', ' திரைப்படம்  ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது . இந்த படம் சினிமாவில் அவருக்கு நல்ல திருப்பத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது என்றே சொல்லலாம் .இத் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக நடிப்பதும் மட்டுமில்லாமல் அவருடைய மனைவியான கீர்த்திபாண்டியனுடன் சேர்ந்து நடித்திருக்கின்றார் . 


 'ப்ளூ ஸ்டார்', 'சக்சஸ் மீட்டின்  போது மனம் உருகி உரையாற்றும் போது அவருடைய மனைவி கீர்த்திபாண்டியன்  மேடையிலேயே கண்கலங்கி அழுதுள்ளார் .

கணவன் மனைவி என்றால் இப்பிடி தான் இருக்க வேண்டும் . இவர்கள் இருவரும் ஒருவர் ஒருவர் மேல் வைத்திருக்கும் அன்பை பார்க்கும் போது ஆசையாக உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்துக்களையும்  தெரிவித்து வருகின்றனர் . 


" என்னுடைய ரியல் லைப் ஆனந்தி தான் கீர்த்தி நான் கீர்த்தியிடம் போய் ஒரே புலம்புவன் ,  எந்த படத்தில ஹீரோ என்ட்ரி ஆனாலும் விசில் அடிச்சி கை தட்டுவாங்க ஆனால்  நான் என்ட்ரி ஆகும் போது கை தட்டல் சத்தம் கேட்கிறதே இல்லை . என்று ஒரே போய் புலம்புவேன் . 


ஆனால் முதல் தடவையாக  "ப்ளூ ஸ்டார்' திரைப்படத்திற்கு நான் அந்த கைத்தட்டல் அந்த விசில் சத்தம் எல்லாமே கேட்டேன் . ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன் . "



இத் திரைப்படத்திற்கு இவ்வளவு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை ரொம்ப நன்றி எல்லோருக்கும் என்று  மனம் உருகி நடிகர் அசோக் செல்வன் பேசும் போது அவருடைய மனைவியான நடிகை கீர்த்தி பாண்டியன் விழா மேடையிலேயே கண் கலங்கி அழுது இருக்கிறார் . 

Advertisement

Advertisement