• May 18 2024

பிக்பாஸ் வனிதாகிட்ட இந்த கெட்ட பழக்கமும் இருக்கா?- வெளியாகிய புகைப்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

stella / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் நவீன் இயக்கத்தில் ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், உருவாகும் திரைப்படம் தான் 'கடைசி தோட்டா'.இப்படத்தில்முதன்மை கதாபாத்திரத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும், ராதாரவி, ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் வையாபுரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.


மர்டர் மிஸ்டரி ஜானரில் உருவாகும் இப்படத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக வனிதா விஜயகுமார் நடிக்கின்றார். சுருட்டு பிடிக்கும் மிரட்டலான மற்றும் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடைய இந்த கதாபாத்திர வடிமைப்பும், அவருடைய அதிரடியான நடிப்பும் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், ராதாரவி மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார், அவரது வேடமும் பேசப்படும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதேபோல், நடிகர் வையாபுரி வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் காட்சிகளாக இருக்கும்.இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


 சீட் நுணியில் உட்கார வைக்கும் மர்டர் மிஸ்டரி திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.அதற்க்கு முன்னதாக வனிதா விஜயகுமார் சுருட்டு பிடிக்கும் சில BTS புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement