• Apr 30 2024

இமான் மனைவி விவகாரம்; தப்பை மறைக்க பல கோடிகளை கைமாற்றிய SK..! ஆதாரம் சிக்கியது!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் டி.இமான்.

சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு அறிமுகமானது முதல் பல ஹிட் பாடல்களை இமான் வழங்கி அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் இமான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும் இமானும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இமான், 'இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் பயணிக்கிறது கஷ்டம். வரும் காலங்களில் அவரது படங்களில் பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. வெளிப்படையாக சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும். என் வாழ்க்கையில் நடந்த துன்பங்கள், வலிகளுக்கு சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய காரணம். அவருடன் மிகவும் நெருக்கமாக பழகியதால், அவர் செய்த துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.' எனத் தெரிவித்திருந்தார். இது குறித்த பேச்சு தான் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது.


இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரபல யூடியூப்  வலைப்பேச்சு அந்தணன் தெரிவிக்கையில், 'ஒருவரை நம்பி வீட்டுக்குள் அழைக்கும் போது அதற்கான மரியாதையை அவர் காப்பாற்றி இருக்க வேண்டும். இந்த விவகாரத்தை மறுத்த  இமானின் முன்னாள் மனைவி, சிவகார்த்திகேயன் நல்லவர், வல்லவர் என்று சொன்னபோது உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு என்றுதான் கேட்க தோன்றுகிறது. இதில் மோனிகா கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்திருக்கலாம். 

ஆனால், இந்த விவகாரத்தில் மீம் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய தொகை கைமாறி உள்ளது என்பது மட்டும் தெளிவான உறுதி. மேலும் இருவரின் இந்த பிரச்சனை தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும், சிவகார்த்திகேயன் செய்துவிட்டார். 

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு பெரும் தொகையும், எதிராக பேசுபவர்களின்  யூடியூப் சேனலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஒரு ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை தேவைப்பட்டால் வெளியிடுவேன்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement